முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் குறித்த சுருக்கம்
தற்செயல் தேர்தல்கள் 2014 - WP No.25123-2014 தீர்ப்பு விவரம்
உள்ளாட்சித் தேர்தல்கள் - 2011 (சென்னை மாநகராட்சி) தீர்ப்பு விவரம்
உள்ளாட்சித் தேர்தல்கள் - 2006 (சென்னை மாநகராட்சி) தீர்ப்பு விவரம்

வ.எண். வழக்கு எண். மற்றும் தீர்ப்பு நாள் வழக்கு குறித்த சுருக்கம்
மனுதாரரின் கோரிக்கை தீர்ப்பின் சாராம்சம்

1.

திரு.ஜி.குமார் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண்.24969/2011 தீர்ப்பு நாள் :- 28.10.2011 செங்கம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண். 18க்கான வார்டு உறுப்பினர் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்கு தேர்தலை நடத்திய பிறகு செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்திட பிரதிவாதிகளுக்கு உத்திரவிட கோரியது. மாநில தேர்தல் ஆணையம் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலை நடத்தலாம்.

2.

திருமதி பி. ஜானகி பழனிச்சாமி என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனுக்கள் எண்.12905 மற்றும் 13322/2011 தீர்ப்பு நாள்:- 29.11.2011 நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சித் தலைவர் தனது வாக்கினை கிராம ஊராட்சிக்கு மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சித் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டா? அல்லது இல்லையா? கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் கிராம ஊராட்சித் தலைவர் வாக்களிக்கலாம்.

3.

திரு. எஸ்.பி.சேகர் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண். 26160/2011 தீர்ப்பு நாள்:- 12.11.2011 நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் ஒரு உறுப்பினர் வாக்குச்சீட்டில் மையினை ஊற்றியதால் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரியது. மனு ஏற்க தகுதியில்லை என தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.

4.

திருமதி ஆர்.மயிலம்மாள் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண்.11850/2011 தீர்ப்பு நாள்:- 14.10.2011 குற்றவியல் வழக்கில் இரு வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்ட 5வது எதிர்மனுதாரரின் வேட்புமனுவினை ஏற்றுக் கொண்டதை எதிர்ப்பது தொடர்பாக. தேர்தல் நடைமுறையிலுள்ளது என்பதையும் தேர்தல் நடைமுறையில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் 243ZG மற்றும் 243O ஆகியவை தடை விதிக்கிறது என்பதையும் தெரிவித்து மனுதாரரை தேர்தல் அசல் மனு மூலம் தேர்தல் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

5.

திரு. ஜி.பூங்குன்றன் மற்றும் 6 நபர்களால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனுக்கள் 24078, 24132, 24158, 24187, 24768 மற்றும் 24769/2011 மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் எண். 1664/2011 மற்றும் 377/2012 தீர்ப்பு நாள்:- 26.04.2012 வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணுகை தொடர்பாக வீடியோ பதிவுகள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்திரவிட்டதை நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக. சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு அளித்த இயக்க ஆணையின்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பணிக்குழு அனைத்து அதிகபட்ச முனைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வீடியோ பதிவுகள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்து எதிர்மனுதாரர் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படவில்லை என தெரிவித்து கீழ்க்கண்ட கருத்துக்களையும் தெரிவித்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது:-
(அ) 2006 சென்னை மாநகராட்சி சாதாரணத் தேர்தல்களின் போது நடந்தது போல் 17.10.2011 அன்று நடந்த தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
(ஆ) எந்த ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியிலும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்ததாக எந்த ஒரு மனுதாரராலும் தனது மனுவில் குறிப்பிடப்படவில்லை.
(இ) குற்றச்சாட்டுகளான "வாக்குச்சாவடியை கைப்பற்றியது" மற்றும் "கள்ள வாக்கு போட்டது"  போன்றவை பொய்யானவை மற்றும் தெளிவில்லாதவை.
(ஈ) பெரிய அளவிலான தேர்தல் தொடர்பான முறைகேடுகள், வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், கள்ள வாக்கு போடுதல் அல்லது எவ்வித விலக்கக்கூடிய அல்லது அசாதாரணமான சூழ்நிலைகள் ஏதும் மனுக்களை ஏற்று தேர்தலை ரத்து செய்யும் வகையில் இல்லை.
(உ) 14.10.2011 நாளிட்ட உயர்நீதி மன்ற இயக்க ஆணைகளில் தெரிவித்தவாறு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மிகச் சில வாக்குச்சாவடிகளில் மேலெழுந்தவாரியான வீடியோ பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(ஊ) மொத்தமுள்ள 4875 வாக்குச்சாவடிகளில் 542 வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மாண்பமை உயர்நீதிமன்றத்தை உள்ளாட்சித் தேர்தல்களில் தலையிட கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
(எ) 14.10.2011 அன்றைய அமர்வு நீதிமன்ற நீதிப்பேராணை 22859/2011ல் தரப்பட்ட இயக்க ஆணைகளின்படி அனைத்து எதிர்மனுதாரர்களும் அனைத்து வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல்களை நடத்தி முடித்துள்ளனர். எனவே, இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை.

6.

அரசியல் கட்சிகளான ஜனதா கட்சி, காங்கிரஸ் ஜனநாயக பேரவை, புதிய தமிழகம் மற்றும் பிற கட்சியினர் மற்றும் மனுதாரர்களால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனுக்கள் எண்.17248, 17685, 17886, 17893, 17884 மற்றும் 18095/2001 தீர்ப்பு நாள்:- 01.10.2001 உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்தல் சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களுக்கு  ஒதுக்கீடு செய்வதில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள்  ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை வழங்கக் கோருவது தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கிடலாம் ஆணையிடப்பட்டது.

7.

திரு.எஸ்.சதானந்தன் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண். 25032/2011. தீர்ப்பு நாள்:- 06.12.2012 மனுதாரர் முதல் குலுக்கலில் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் இரண்டாவது முறையாக குலுக்கல் முறையில் தேர்தல் நடத்தி மற்றொரு நபரை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்து தேர்தல் முடிவு அறிவித்துள்ளார். முதலில் நடத்தப்பட்ட குலுக்கலில் மனுதாரரை தேர்ந்தெடுத்ததால் இரண்டவது முறை குலுக்கல் நடத்தப்பட்டதை ரத்து செய்து தன்னை வார்டு உறுப்பினராக பதவி ஏற்பு செய்விக்க கோரியது தொடர்பாக. இரண்டாவது முறை நடத்திய குலுக்கல் அங்கீகாரம் அற்றது எனவும், மற்றொரு புதிதாக பணியமர்த்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் புதியதாக குலுக்கல் நடத்திடவும் உத்திரவிடப்பட்டது.

8.

திரு.எல்.கே.வெங்கட் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண்.23922/2012. தீர்ப்பு நாள்:- 23.01.2012 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 (3) (a) -இல் "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிட  தகுதியற்றவர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளது அரசியல் அமைப்பு சட்டக் கூறு 14-க்கு எதிரானது என்பது தொடர்பாக. ஊராட்சிகள் சட்டத்திருத்த மசோதா நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டதால் நீதிப்பேராணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டம் 44/2012-இல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் தற்போது செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடலாம் என திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

9.

திருமதி.ஜானகி என்பவரால் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண்.23054/2011. தீர்ப்பு நாள்:- 11.10.2011 திருவண்ணாமலை மாவட்டம். தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மேல்பாச்சார் கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் தன்னை போட்டியிட அனுமதிக்குமாறு கோரியது. மனுதாரர், தகுதி பெற்ற அலுவலரிடமிருந்து பழங்குடியினர் இன சாதிச்சான்றினை பெறாததால் மனுதாரரின் வேட்பு மனுவினை தள்ளுபடி செய்தது சரியே.

10.

திரு. எம்.பூமிநாதன் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட நீதிப்பேராணை மனு எண். 6869/2012. தீர்ப்பு நாள்:- 24.08.2012 குறைவெண் வரம்பினை கருத்தில் கொள்ளாமல் டி.புனவாசல் கிராம ஊராட்சித் துணைத்தலைவருக்கான தேர்தலில் மனுதாரர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்படி தேர்தலை ரத்து செய்த ஆணையை எதிர்த்தது தொடர்பாக. மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி மனுவினை தள்ளுபடி செய்து ஆணையிட்டது.

11.

திரு, பி. பாண்டியராஜ் என்பவரால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் அசல் மனு எண். 2/2011 தீர்ப்பு நாள்:- 13.03.2014 இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதால் 9ஆம் எதிர்மனுதாரரின் வேட்புமனு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அவரது தேர்தல் செல்லத்தக்கதல்ல என விளம்புகை செய்யக் கோரியது. மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற 2011(3) CTC பக்கம் 285ல் சாந்தா எதிர்மனுதாரர் கவிதா என்கிற வழக்கில் தெளிவாக வழங்கப்பட்டுள்ள முன்னோடி தீர்ப்புரையை மேற்கோளிட்டு இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பினும் வேட்பு மனுவை நிராகரிக்க முடியாதென தேர்தல் அசல் மனுவினை தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது.